சரணடைய சில வாரங்கள் அவகாசம் கேட்டு நவ்ஜோத் சிங் சித்து கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.
கடந்த 1988-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி பஞ்சாப்பின் பாட்டியாலாவில் உள்ள ஷெரன்வாலா கேட் கிராசிங் அருகே ஜீப்பை சாலையில் நிறுத்தியதாக ஏற்பட்ட மோதலில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, குர்னாம் சிங் என்ற நபரை தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்கப்பட்ட நபர் பின்னர் இறந்துவிட்டார். இதனால் அப்போது, சித்து மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, 1999 இல், பாட்டியாலா விசாரணை நீதிமன்றம் சரியான ஆதாரம் இல்லாததால் கொலைக் குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவித்தது. ஆனால், 2006-ல் குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்தினர் உயர்நீதிமன்றத்தை அணுகியபோது, சித்து குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சித்து மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் 34 வருடங்களுக்கு பிறகு சித்து குற்றவாளி என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. மேலும் இந்த வழக்கில் சித்துவுக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, நீதிமன்றத்தில் சரணடையவும் உத்தரவிடப்பட்டது.
இதன்பின், உடல் நல காரணங்களுக்காக சரணடைய சில வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் நவ்ஜோத் சிங் சித்து கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், சரணடைய சில வாரங்கள் அவகாசம் கேட்டு நவ்ஜோத் சிங் சித்து கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. சாலை விபத்து வழக்கில் 1 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சரணடைய அவகாசம் கோரியிருந்தார் சித்து. இதற்கு மறுப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…