சிறப்பு அந்தஸ்த் ரத்து ஓராண்டு நிறைவு.. ஜம்மு காஷ்மீரில் 2 நாள்கள் ஊரடங்கு..!
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியல் சாசன பிரிவு 370- ஐ மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாவும் மத்திய அரசு பிரித்தது.
இந்நிலையில், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு நாளையுடன் ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது என்பதால் ஜம்மு காஷ்மீரில் இன்று, நாளை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 5 ஆம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க பிரிவினைவாதிகள் முயற்சித்து வருவதாகவும், பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த திட்டம் செய்துள்ளதாகவும் தகவல் கிடைத்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பொருந்தும், மருத்துவ அவசரநிலைகள் மற்றும் கொரோனா பணியாளர்கள் மட்டுமே பாஸ் வைத்து கொண்டு செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தபோது ஜம்மு காஷ்மீர் சில அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இதையடுத்து , வீட்டுக்காவலில் இருந்த பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா உள்பட பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.