டெல்லி நீதிமன்ற வளாகத்திற்குள் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் வழக்கறிஞர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
துவாரகா நீதிமன்ற வளாகத்தில் வக்கீல் அறைக்கு வெளியே 45 வயதுடைய ஒரு நபர் சுட்டுக் கொன்ற வழக்கில் வழக்கறிஞர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அருண் சர்மா, ரோஹித் மற்றும் தர்ஷன் ஆகிய மூன்று பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். பிரதீப் என்பவர் நேற்று ஷாகுர்பூர் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டார்.
கடந்த திங்கள்கிழமை இரவு 11.30 மணியளவில் துப்பாக்கி காயம் ஏற்பட்டு ஒருவர் இறந்துவிட்டதாகவும், உத்தம் நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ஸ்விகர் லுத்ரா என அடையாளம் காணப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
விசாரணையின் போது, வழக்கறிஞர்அருண் ஷர்மாவின் வாடிக்கையாளராக இருந்த லுத்ரா ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மேலும் அவரது கூட்டாளியான பிரதீப் மற்றும் ஒரு ஆட்டோரிக்ஷா டிரைவர் தர்ஷனுடன் அவரை சந்திக்க வந்திருந்தார். அப்போது, நீதிமன்றத்தில் 444 ஆம் அறை அறைக்குள் இவர்கள் மது அருந்தியதாக போலீசார் தெரிவித்தனர். இவர்களுடன் அருண் சர்மா டிரைவர் ரோஹித்தும் மது அருந்தியுள்ளார்.
அப்போதுதான், லுத்ராவிற்கு துப்பாக்கி காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகள் சிலர் அறைக்கு வெளியே இரத்தத்தை சுத்தம் செய்வதையும், இறந்தவரின் உடலை இழுத்துச் செல்வதையும் இது காட்டியது என்று போலீசார் தெரிவித்தனர்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…