டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து.! ஒருவர் உயிரிழப்பு.!

Delhi IT Office Fire

சென்னை : டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டெல்லியில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் சி.ஆர் கட்டிடத்தில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு , சம்பவ இடத்திற்கு சுமார் 21 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

இதற்கிடையில்,  அலுவலகத்தின் உள்ளே இருந்த ஊழியர்கள் பெரும்பாலானோர் வெளியேறினார். வெளியேற முடியாமல் தவித்த ஊழியர்களை, தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக ஜன்னல் வழியாக வெளியேற்றினர். அதனை அடுத்து தீ முழுதும் அணைக்கப்பட்டு குளிர்விக்கும் முயற்சி நடைபெற்றது.

இந்த தீ விபத்தில், யாருக்கும் எந்தவித  பாதிப்பும் ஏற்படவில்லை என முதலில் கூறப்பட்டது. ஆனால், தற்போது வெளியான தகவலின்படி, ஒரு ஊழியர் உயிரிழந்தார் என PTI செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணத்தை தீயணைப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்