ஹைதராபாத் : கோத்தூரில் மூன்று லாரிகள் மோதியதில் ஒருவர் பலி, மற்றொருவர் காயம் அடைந்தார். சிசிடிவி காட்சிகள் மூலம் மூன்று லாரிகள் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தெரிய வந்துள்ளது. ஒரு ஸ்கூட்டியில் இரண்டு நபர்கள் அந்த சாலையில் சென்று கொண்டு இருந்தார்கள். அப்போது அதற்கு பக்கத்தில் இருந்த ஒரு டிரக் வேறு திசையில் இருந்து சாலையை கடக்க முயன்றது.
அப்போது அந்த திசையில் வந்த மற்றோரு லாரி இரண்டாவது லாரியின் மீது மோதியது. மோதியவுடன் அந்த லாரி நிலை தடுமாறி எதிர்முனையில் சென்று கொண்டு இருந்த மற்றோரு லாரி மீது மோதியது. இதில் 3-வதாக மோதிய அந்த லாரி கீழே விழுந்த நிலையில் அந்த பக்கம் சென்று கொண்டு இருந்த ஸ்கூட்டியில் சென்று கொண்டு இருந்த இரண்டு பேர் மீது கவிழ்ந்தது.
இதில் சம்பவ இடத்தில் ஸ்கூட்டி ஓட்டி சென்ற ஒருவர் உயிரிழந்தது தெரியவந்தது. அதே நேரத்தில் மற்றோருவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த பலரும் யார் மீது தவறு? எனவும் யார் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்? எனவும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…