விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது டெல்லியின் டிடியு மார்க்கில் உள்ள பகுதியில் டிராக்டர் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
விவசாயிகள் 62-வது நாளான இன்று டிராக்டர் பேரணியை முன்னெடுத்து வருகின்றனர். சிங்கு, டிக்ரி எல்லை வழியாக போலீசாரின் தடுப்புகளை உடைத்துக் கொண்டு டெல்லிக்கு நுழைய முயன்றனர்.அப்போது ஒரு சில விவசாயிகள் போலீசார் அனுமதி வழங்கிய பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றதாகவும்,அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.இதனால் விவசாயிகளை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் தலைநகர் டெல்லிக்குள் நுழைந்து செங்கோட்டையை முற்றுகையிட்டனர்.இதனால் தலைநகர் டெல்லி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் பல்வேறு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.இதன் காரணமாக, கிழக்கு மற்றும் வடகிழக்கு டெல்லியில் இருந்து மத்திய டெல்லிக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் தான் டெல்லியின் டிடியு மார்க் பகுதியில் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது டிராக்டர் கவிழ்ந்து விவசாயி ஒருவர் உயிரிழந்தார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : India Today
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…