புதிய திருப்பம்!! ‘குண்டு வைத்தது நான் தான்’ – கேரள குண்டு வெடிப்பு விவகாரத்தில் ஒருவர் சரண்!

KeralaBlast

கேரளா மாநிலம் களமச்சேரியில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக, ஒருவர் சரணடைந்துள்ளார்.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ வழிபாட்டுத் தளத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது, 30க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது, பயங்கரவாத தாக்குதலா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், ஒன்றிய அரசின் புலானாய்வு அமைப்புகளான தேசிய புலனாய்வு முகமை, தேசிய பாதுகாப்பு படை ஆகியவை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், கொச்சியைச் சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத ஒருவர், நான் தான் வெடிகுண்டு வைத்ததாக கூறி, திருச்சூரில் உள்ள கொடகரா காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, போலீசார் சந்தேகத்தின் பேரில் குஜராத்தை சேர்ந்த மேலும் ஒருவரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இது குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையில், தொடர் குண்டுவெடிப்புக்கு சற்று முன், கிறிஸ்தவ கூட்டம் நடைபெற்ற மையத்தில் இருந்து புறப்பட்ட கார் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் கிடைத்தும் காரை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும், தொடர்ந்து அந்த காரை தேடும் பணியும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

பிரார்த்தனை கூட்டத்தில் வெடித்தது ‘டிபன் பாக்ஸ் குண்டு’ – டிஜிபி பரபரப்பு தகவல்! நடந்தது என்ன?

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு

கேரளா களமசேரியில் வழிபாட்டு கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து, நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். இன்று குண்டுவெடிப்பின் சம்பவம் நடைபெற்ற போது பினராயி விஜயன் டெல்லியில் இருந்தார்.

கேரளா குண்டு வெடிப்பு: முதல்வர் பினராயி விஜயனுடன் தொடர்புகொண்ட அமித்ஷா – அதிரடி உத்தரவு!

எனவே, குண்டுவெடிப்பு ஏற்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகள் பினராயி விஜயனுக்கு தகவலை தெரிவித்தனர். இதனையடுத்து உடனடியாக டெல்லியில் இருந்து தற்போது கேரளாவுக்கு பினராயி விஜயன் வந்துகொண்டு இருக்கிறார். இன்று இரவு அல்லது மாலைக்குள் கேரளாவிற்கு வந்தவுடன் குண்டு வெடிப்பை பற்றி விரிவான விவரங்களை கேட்டறிந்து அதன்பிறகு நாளை காலை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

கேரளா குண்டுவெடிப்பு: அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு!

டிபன் பாக்ஸ் குண்டு

இன்று காலை 9.40 மணியளவில் அடுத்தடுத்த 3 குண்டுகள் வெடித்துள்ளது. கிறிஸ்தவ வழிபாட்டுத் தளத்தில் வெடித்தது “டிபன் பாக்ஸ் குண்டு” தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது, குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், தேசிய புலனாய்வு முகமை, தேசிய பாதுகாப்பு படை மற்றும் கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு உள்ளிட்ட அமைப்புகளும் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும்  கேரள டி.ஜி.பி தகவல் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்