பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிக்சூட்டில் நக்சலைட் ஒருவர் உயிரிழப்பு.!
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள பத்பேடா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையில் மாவட்ட ரிசர்வ் காவலர் மற்றும் பஸ்தார் ஃபைட்டர்ஸ் ஆகிய காவல்துறையின் இரு பிரிவுகளின் கூட்டுக் குழு ஈடுபட்டனர். .315 ரக துப்பாக்கி மற்றும் 12 போர் ரக துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளது.
இறந்தவர் யார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.