ஒரே தேசம் ஒரே தேர்தல் தொடர்பாக மத்திய அரசு கூட்டியுள்ள அனைத்து கட்சிகளின் கூட்டமானது டெல்லியில் நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் , ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் தேசியச் செயலாளர் சுதாகர் ரெட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
ஆனால் திமுக,காங்கிரஸ்,திரிணாமுல்,தெலுங்கு தேசம்,சமாஜ்வாதி,பகுஜன் சமாஜ்வாதி ஆகிய கட்சி தலைவர்கள் யாரும் இந்த கூட்டத்தில் பங்கேற்க்கவில்லை.
மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான பிரதமர் மோடியின் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை. கூட்டத்தில் கலந்துகொள்ள அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லி சென்றபோதும் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…