நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு ஆலோசனைகளும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சிறப்பு குழுவில் மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத், என்கே சிங், சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே மற்றும் ஊழல் ஒழிப்பு முன்னாள் ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த சிறப்பு குழு பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறது.
ஜெய்ப்பூரில் இன்று இந்திய காவல்துறை டிஜிபிக்கள் மாநாடு.! பிரதமர் மோடி – அமித் ஷா பங்கேற்பு…
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைகளும் கேட்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. இதன்படி, இந்த சிறப்பு குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முடிவெடுக்கும் என கூறப்பட்டது. மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகேட்பு தொடங்கியுள்ளது. அதன்படி, ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக ஜனவரி 15ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த சட்டங்களில் திருத்தம், நிர்வாக கட்டமைப்பு மாற்றம் குறித்த ஆலோசனைகளை அனுப்பலாம். அதாவது, ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்த தற்போதைய சட்ட நிர்வாகத்தில் மாற்றம் செய்ய ஆலோசனைகளை வழங்கலாம். தங்கள் பரிந்துரைகளை onoe.gov.in அல்லது sc-hic@gov.in மின்னஞ்சலில் அனுப்பலாம் என ஒரே நாடு, ஒரே தேர்தல் குழு செயலாளர் கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…