ஒரே நாடு ஒரே தேர்தல்! அக்.25ம் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அடுத்தகட்ட ஆலோசனை!
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அக்.25ம் தேதி முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அடுத்தகட்ட ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நடைமுறையை செயல்படுத்த மத்திய பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது.
ஒரே நேரத்தில் தேர்தல் என்ற நடைமுறை சாத்தியமா என்பது குறித்து ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் என்ற நடைமுறை சாத்தியமா என்பது குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்பு குழு ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருகிறது.
இந்த சிறப்பு குழு உறுப்பினர்கள் அமித்ஷா, காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத், என்கே சிங், சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, ஊழல் ஒழிப்பு முன்னாள் ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த சிறப்பு குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முடிவெடுக்கும் என கூறப்பட்டது. அந்தவகையில், ஒரு நாடு ஒரே தேர்தல் கடந்த மாதம் சிறப்பு குரலு ஆலோசனை மேற்கொண்டது.
இதன்பின் உயர்மட்ட குழு அறிக்கை சமர்ப்பித்து உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளிடம் கருத்துக்கள் கேட்கப்படும் என்றும் இந்திய சட்ட ஆணையமும், தங்களது பரிந்துரைகளை வழங்குமாறும் ஆலோசனை குழு கேட்டுக்கொண்டது. இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து வரும் 25ம் தேதி முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான சிறப்பு குழு அடுத்தகட்ட ஆலோசனை நடத்துகிறது.