ஒரே நாடு ஒரே தேர்தல்: நாட்டுக்கு நன்மை.. அரசியல் கட்சிகளுக்கு ராம்நாத் கோவிந்த் வேண்டுகோள்!

ramnath kovind

இந்தியாவில் நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு சிறப்பு குழுவை மத்திய அரசு அமைத்தது.

இந்த சிறப்பு குழுவில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத், என்கே சிங், சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே மற்றும் ஊழல் ஒழிப்பு முன்னாள் ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். குழுவின் கூட்டங்களில் மத்திய சட்ட அமைச்சர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த சிறப்பு குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முடிவெடுக்கும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான சிறப்பு குழு அவ்வப்போது ஆலோசனை கூட்டங்களை நடத்தி, இந்த திட்டம் குறித்து ஆராயப்படுகிறது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையும் கேட்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்கப்படும் என கூறப்பட்டது.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் கடமை.. சட்டத்துறை அமைச்சர் பேட்டி!

இந்த நிலையில், உத்தரப் பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆராய மத்திய அரசு உயர்மட்டக் குழுவை அமைத்து அதன் தலைவராக என்னை நியமித்தது. குழுவின் உறுப்பினர்கள், பொதுமக்களுடன் சேர்ந்து, இந்த ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவார்கள்.

இதுதொடர்பாக தேசிய அளவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தொடர்பு கொண்டு ஆலோசனைகளை கேட்டுள்ளேன். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆக்கபூர்வமான ஆதரவு அளித்தால் நாட்டுக்கு நன்மை அளிக்கும். இந்த திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்க உள்ளோம் என்றும் இது தேசிய நலன் சார்ந்த விஷயம் எனவும் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்