ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் : கொந்தளித்த திமுக,காங்கிரஸ் கட்சிகள்!

'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா கூட்டாட்சிக்கு எதிரானது என கூறி மக்களவையில் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

one nation one election Resistance

டெல்லி : ஒரே நாடு ஒரே திட்டத்தை செயல்படுத்துவதற்கான சட்டமசோதாவை  இன்று நாடாளுமன்றத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்தார். ஏற்கனவே, இந்த மசோதாவை தாக்கல் செய்வதற்கு முன்பே முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திருச்சி எம்பி சிவா, பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள்.

இப்படி எதிர்ப்புகளுக்கு மத்தியில் தான் மசோதாவும் இன்று தாக்களும் செய்யப்பட்டது. இந்நிலையில், தாக்கல் செய்தவுடன் மக்களவையில் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி , திரிணாமுல் காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளை சேர்ந்த அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசியிருந்தார்கள்.  யாரெல்லாம் எதிர்ப்பு தெரிவித்து பேசியிருந்தார்கள் என்பதற்கான விவரம் பற்றி பார்ப்போம்..

மனிஷ் திவாரி (காங்கிரஸ்) : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்வதற்கு முன்பிலிருந்தே காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இது கூட்டாட்சி அமைக்க எதிரான ஒன்று. எனவே, நாங்கள் இதனை எதிர்க்கிறோம். இந்தியா முழுவதும் உள்ள லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒத்திசைக்க முயற்சிக்கும் இந்த திட்டம், இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பிற்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது” என காட்டத்துடன் பேசினார்.

கல்யாண் பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்)  : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது. இதனை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். ஏற்றுக்கொள்ளவும் முடியாது. இந்த மசோதா தேர்தல் சீர்திருத்தம் அல்ல ஒருவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதாக உள்ளது இனி தேர்தல் கமிஷன்தான் எல்லாவற்றையும் முடிவு செய்யுமா? அனைத்து அதிகாரத்தையும் தேர்தல் ஆணையத்திடம் எப்படி ஒப்படைக்க முடியும்? ” எனவும் கூறினார்.

தர்மேந்திர யாதவ் (சமாஜ்வாதி) : இந்தியாவின் பன்முகத்தன்மையை சீர்குலைக்க சதி நடக்கிறது 8 சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த முடியாதவர்கள். ஒரு நாடு ஒரு தேர்தல் எப்படி நடத்துவார்கள்? அரசியல் சாசனத்தின் உணர்வை எழுத பாஜக நினைக்கிறது. அரசியலமைப்பின் அடிப்படைக்கே எதிரானது ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இந்த சட்டம் ஏழை மக்கள், இஸ்லாமியர்களுக்கு எதிரானது. இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்” என பேசியுள்ளார்.

டி.ஆர். பாலு (திமுக) :  ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமில்லாத ஒன்று.  5 ஆண்டுகளுக்கு ஒரு அரசைத் தேர்ந்தெடுக்க மக்களுக்கு உரிமை உள்ளது, ஒரே நேரத்தில் தேர்தல் மூலம் எப்படி பறிக்க முடியும்? மத்திய அரசுக்கு பெரும்பான்மை இல்லாத போது இந்த மசோதாவை எப்படி அனுமதிக்க முடியும்? ஒரே நாடு ஒரே தேர்தல் நாடுமுழுவதும் சாத்தியமற்றது இதனை நிலைக்குழுவின் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலனை செய்ய வேண்டும். அதன்பிறகு விவாதத்துக்கு அவைக்கு கொண்டு வரவேண்டும்” எனவும் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்