ஒரே தேசம் : ஒரே தேர்தல் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது!
ஒரே தேசம் ஒரே தேர்தல் தொடர்பாக மத்திய அரசு கூட்டியுள்ள அனைத்து கட்சிகளின் கூட்டமானது டெல்லியில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் , ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், அதிமுக சார்பில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் முன்னாள் எம்பி வைத்தியலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் தேசியச் செயலாளர் சுதாகர் ரெட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
திமுக,காங்கிரஸ்,திரிணாமுல்,தெலுங்கு தேசம்,சமாஜ்வாதி,பகுஜன் சமாஜ்வாதி ஆகிய கட்சி தலைவர்கள் யாரும் இந்த கூட்டத்தில் பங்கேற்க்கவில்லை.