மத்திய பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் நிதி உதவி!
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என மத்திய பிரதேசத்தின் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக தீவிரமாக பரவி கொண்டே இருக்கிறது. கொரோனாவின் இரண்டாம் அலையினால் ஒவ்வொரு மாநிலங்களிலும் தினமும் அதிக அளவிலான பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தங்கள் மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு அம்மாநில அரசுகள் வெவ்வேறு நிதி உதவிகளை செய்து வருகின்றன.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலையால் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்க கூடிய குழந்தைகளுக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும், இலவச கல்வி, இலவச குடும்ப அட்டை, வட்டியில்லா கடன் அளிக்கப்படும் எனவும் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.