இந்தியாவில் ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்பு – மொத்த பாதிப்பு எவ்வளவு?

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை 6,547,413 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் இதுவரை இந்தியாவில் 101,812 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இந்தியாவில் 6,547,413 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 5,506,732 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனாவால் புதிதாக 75,479 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் 937 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 938,869 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.