கர்நாடகாவில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!
ஏடிஎம்-ல் பணத்தை நிரப்ப வந்த பாதுகாப்பு ஊழியர் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.
பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில், வங்கி ஊழியர் ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, சினிமா பாணியில் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தகவலின்படி, பீதர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை அடுத்துள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் பணம் போட ஊழியர்கள் வந்திருந்தனர். அப்போது பைக்கில் வந்த மர்மநபர்கள் இருவர் கண்ணில் உப்பை வீசி துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவரின் நிலைமை மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளது. இந்த திருட்டு சம்பவத்தில் 93 லட்சம் ரூபாயை கொள்ளையர்கள் கொள்ளையடித்து விட்டு தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, இந்த சம்பவத்தை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த கர்நாடகா போலீஸ் கொள்ளையர்களை தேடும் பணியை தொடங்கியுள்னர். அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சியின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.