சத்தீஸ்கர் மாநிலம் துப்பாக்கி வெடிமருந்து ஆலையில் விபத்து.! ஒருவர் பலி, 6 பேர் காயம்..

blast at Chhattisgarh

சத்தீஸ்கர் : சத்தீஸ்கரின் வெடிமருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது, இதில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் பெமேதராவில் உள்ள வெடிபொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், 6 பேர் காயமடைந்தனர். இது அம்மாநிலத்தின் மிகப்பெரிய துப்பாக்கித் தூள் தயாரிக்கும் ஆலை ஆகும்.

துர்க் மற்றும் ராய்ப்பூர் மாவட்டங்களில் இருந்து மாநில பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்தன. விபத்தின் போது, இந்த தொழிற்சாலையில் குறைந்தது 100 பேர் வேலை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடேன தீயை அணைக்கும் முயச்சியில் ஈடுபட, மீட்புப் படையினர் விபத்தில் சிக்கியிருந்தவர்களை உடனடியாக வெளியேற்றினர. மேலும், இந்த குண்டுவெடிப்புக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாக என தகவல் தெரிவிக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்