அயோத்தி குழந்தை ராமருக்கு தினமும் ஒரு மணிநேரம் ஓய்வு!

ram lalla

கடந்த மாதம் 22ம் தேதி உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் பிரமாண்டமாக நடைபெற்றது. அப்போது, கோவில் கருவறையில் குழந்தை ராமர் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பிராண பிரதிஷ்டை செய்து வைத்து, முதல் ஆளாக பால ராமரை பூஜை செய்து வழிபட்டார்.

இதன்பின், அயோத்தியில் குழந்தை ராமரை தரிசிக்க பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால், ராமரை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளதால், இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த கோவில் வளாகத்தில் மத்திய படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டு உள்ளனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி!

பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே வருவதை கருத்தில் கொண்ட கோவில் நிர்வாகம், சாமி தரிசன நேரத்தை காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவிலில் ஒரு மணிநேரம் நடை மூடப்படும் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்தது.

அதன்படி, அயோத்தி ராமர் கோவில் தினமும் நண்பகல் 12:30 மணி முதல் 01:30 மணி வரை கதவு அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று முதல் அயோத்தி ராமர் கோவில் கதவு மதியம் ஒருமணி நேரம் அடைக்கப்படுகிறது. இதுகுறித்து ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் கூறியதாவது, அயோத்தி கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீராம் லல்லா (ராமர்) ஒரு 5 வயது குழந்தை.

அதிகாலையில் விழிக்கும் அவரால் நீண்ட நேரம் விழித்துக்கொண்டே இருக்க முடியாது. நீண்ட நேரம் விழித்திருப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தை அவரால் தாங்க முடியாது. இதனால் குழந்தை தெய்வத்திற்கு சிறிது ஓய்வு அளிக்கும் வகையில், கோயில் கதவுகள் மதியம் 12:30 மணி முதல் 1:30 மணி வரை மூடப்பட்டிருக்கும். இதன்மூலம் குழந்தை ராமர் ஓய்வு எடுக்க நேரம் கிடைக்கும் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்