முன்னாள் காதலனின் பிறப்புறுப்பை வெட்டி எறிந்த பெண்! 11 ஆண்டுகள் கழித்து தீர்ப்பளித்த நீதிமன்றம்!
- தன்னை பிரிந்து, வேறு பெண்ணை திருமணம் செய்ததால் முன்னாள் காதலனின் பிறப்புறுப்பை அறுத்துவிட்ட்டார் பல் மருத்துவர் சயீதா.
- 11 ஆண்டுகள் வழக்கு நடைபெற்று தற்போது பெங்களூரு நீதிமன்றம் சயீதாவிற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
தன்னை பிரேக் அப் செய்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால், தனது முன்னாள் காதலனை அழைத்து அவரது பிறப்புறுப்பை அறுத்த பெண்ணிற்கு 11 ஆண்டுகள் கழித்து தற்போது 10ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
சரியாக 11 ஆண்டுகளுக்கு முன்னர் நவம்பர் 29ஆம் தேதி, சயீதா என்கிற பெண் மருத்துவர் தன்னை விட்டு பிரிந்த திருமணமான காதலனை தனது கிளினிக்கிற்கு அழைத்துள்ளார். அவரும் வந்துள்ளார். அங்கு முன்னாள் காதலன் மீர் என்பவருக்கு மயக்கமருந்து கொடுத்து அவரது பிறப்புறுப்பை அறுத்துள்ளார்.
மயக்கம் தெளிந்து அதிக ரத்த போக்கை கண்டு அதிர்ச்சியடைந்து மருத்துவமனையில் சேர்ந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்து சயீதாவை கைது செய்தனர். ஆனால், அவர் இது விபத்தினால் ஏற்பட்டது என மறுத்துவந்தார்.
இந்த வழக்கு 11 ஆண்டுகள் கழித்து தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் சயீதா குற்றவாளி என தீர்ப்பளித்தது பெங்களூரு நீதிமன்றம். அவருக்கு 10 ஆண்டு சிறையும் 2 லட்சரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த 2 லட்சரூபாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.