மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முரஸ்திபாத் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த தந்தை, தாய், மகன் ஆகியோர் அவர்களது வீட்டிலேயே மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர்.
முராஷ்திபாத் மாவட்டத்தில் உள்ள ஜியாகாஞ்ச் எனும் ஊரில் வசித்து வந்துள்ளார் போர்நாத் கோபால், இவரது மனைவி பெயர் பியூட்டி, மகன் பெயர் அங்கண். போர்நாத் கோபால் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் வசிக்கும் பகுதியில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் கலந்துகொள்ள வராததாலும், வீடு உள்பக்கம் பூட்டியிருந்ததாலும் சந்தேகமடைந்த அக்கம் பக்க்கத்தினர் உடனே, காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
பின்னர் வந்த காவல்துறையினர், போர்நாத் கோபால் வீட்டை திறந்து பார்த்தபோது, போர்நாத் கோபால், அவரது மனைவி மற்றும் மகன் என மூவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர். இதனை அடுத்து, போலீசார், ‘ இவர்களை யாரேனும் மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டனரா, எதற்காக கொன்றார்கள்,’ என விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டிகள் விளையாடும் நாட்களை தவிர்த்து இடையில் உள்ளூர் போட்டிகளான…
கோவை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் இந்து மத கடவுள் முருகன் கோயில், காசி விஸ்வநாதர்…
சென்னை : சென்னையில் நேற்று 1 சவரன் ரூ.680 குறைந்து ரூ.61,640க்கு விற்பனையான நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு…
சென்னை : சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பனி மூட்டம் நீடிக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டி20 போட்டியின் போது, சஞ்சுவுக்கு காயம்…