ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் அட்வான்டேஜ் ஹெல்த்கேர் இந்தியா; பிரதமர் மோடி உரை.!
ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் – நன்மை சுகாதார பராமரிப்பு’ என்ற நிகழ்ச்சியை பிரதமர் மோடி, டெல்லியில் தொடங்கிவைத்து உரையாற்றினார்.
பிரதமர் நரேந்திர மோடி, இன்று டெல்லியில் அட்வான்டேஜ் ஹெல்த்கேர் இந்தியா (AHCI) (ஒரு பூமி ஒரு ஆரோக்கியம்) 6வது பதிப்பை தொடங்கிவைத்தார், இந்தியாவில் இருந்து மருத்துவ சேவைகளை ஏற்றுமதி செய்வதை ஊக்குவிப்பதற்கான இந்த சர்வதேச உச்சி மாநாட்டில் 200க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, சார்க்(SAARC) நாடுகளில் இருந்து 500+ வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மருத்துவர்களின் திறமையை இந்த உலகம் பார்த்து வருகிறது. இந்தியாவிலும் சரி, மற்ற நாடுகளிலும் சரி, நமது மருத்துவர்கள் அவர்களின் திறமை மற்றும் அர்ப்பணிப்புக்காக பெருமளவில் மதிக்கப்படுகிறார்கள்.
Reducing disparity is India’s priority.
Serving the unserved is an article of faith for us. pic.twitter.com/gMDDl32u5N
— PMO India (@PMOIndia) April 26, 2023
முழுமையான சுகாதாரம் என்று வரும்போது இந்தியாவிடம் முழு பலமும் இருக்கிறது, திறமையும் இருக்கிறது. எங்களிடம் மருத்துவம் சார்ந்த தொழில்நுட்பம் உள்ளது, எங்களிடம் பல சாதனை பதிவுகளும் உள்ளது மற்றும் எங்களிடம் பாரம்பரியம் இருக்கிறது, மேலும் கொரோனா காலகட்டத்தில், தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் மூலம் உயிர்களைக் காப்பாற்றும் உன்னத பணியில், பல நாடுகளுடன் இணைந்து பணியாற்றியதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
For thousands of years, India’s outlook towards health has been holistic.
We have a great tradition of preventive health. pic.twitter.com/R0IM3ZmBy0
— PMO India (@PMOIndia) April 26, 2023
இந்தியருக்கு மட்டுமல்லாமல், உலகில் அனைவருக்கும் மருத்துவம் மற்றும் சுகாதாரம் கிடைக்கும் வகையில் மாற்றுவதே, இந்தியாவின் முதன்மையான நோக்கம் என்று கூறினார், மேலும் பண்டைய இந்தியர்கள் நமக்கு விட்டுச்சென்ற யோகா மற்றும் தியானப் பயிற்சி தற்போது உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டு வருகிறது என்றும் மோடி தெரிவித்தார்.