வீடு தேடி ரேஷன் திட்டம் ஊழியர்களுக்கு ஒரு நாள் நோபல் பரிசு வழங்கப்படும் – மேற்கு வங்க முதல்வர்!
வீடு தேடி ரேஷன் திட்டத்தின் ஊழியர்களுக்கு ஒரு நாள் நோபல் பரிசு வழங்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் துவார ரேஷன் எனும் வீடு தேடி செல்லும் ரேஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டத்தின் மூலமாக 10 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்பெறுவார்கள் எனவும், இனி ஒவ்வொரு மாதமும் வீட்டு வாசலுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக கூறியுள்ள மேற்குவங்க முதல்வர், தங்கள் ஆட்சியை எப்பொழுதும் விமர்சிக்கக் கூடிய பாஜக அரசு அசாம் மற்றும் உத்தரப் பிரதேசத்தை விமர்சிப்பதில்லை. அவர்கள் உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக கவனம் செலுத்த வேண்டும்.
மேற்கு வங்க மாநிலத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ரேஷன் திட்டத்தின்படி வாகனங்களில் கொண்டு செல்லக்கூடிய ரேஷன் பொருட்கள் அனைத்தும் மக்களின் வீட்டிற்கும் நேரடியாக சென்றடையும். இதன் மூலமாக ரேஷன் வினியோகத்தில் ஏற்படும் ஊழலையும் தவிர்க்க முடியும். மேலும் ரேஷன் பொருட்கள் வழங்கக்கூடிய விநியோகஸ்தர்களுக்கு இந்த திட்டத்திற்காக ஒருநாள் நோபல் பரிசும் கிடைக்கும் எனவும் கூறியுள்ளார்.