விநாயகர் சதுர்த்தி அன்று, கைலாசா நாட்டிற்கான ரிசர்வ் வங்கி மற்றும் பணம் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
நித்தியானந்தா மீது கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், குஜராத்தில் உள்ள அவரது ஆஸ்ரமம் மூடப்பட்டது.
இதனையடுத்து, அவர் கைலாசா என்றொரு தனி நாட்டை உருவாக்குவதாக அறிவித்தார். அதன்படி, அதனை உருவாக்கி, அதற்கென பிரதேய்க பாஸ்போர்டையும் உருவாக்கினார். தற்பொழுது கைலாசா எங்கே இருக்கிறது என பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி, தினமும் ஒரு வீடீயோவை வெளியிட்டு தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார் நித்தியானந்தா.
இந்நிலையில் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று, கைலாசா நாட்டிற்கான ரிசர்வ் வங்கி மற்றும் பணம் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, 300 பக்க பொருளாதர கொள்கையும் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வாடிகன் வங்கியை மாதிரியாக வைத்து பேக்ங் ஆப் கைலாசா துவங்கப்படவுள்ளதாகவும், வரும் விநாயகர் சதுர்த்தியன்று கைலாசா நாட்டிற்கான ரிசர்வ் வங்கி மற்றும் பணம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் எனவும், கைலாசா நாட்டிற்கான பணம் வடிவமைக்கப்பட்டு விட்டதாகவும், உள்நாட்டிற்கு ஒரு கரன்சி, வெளிநாட்டு பரிவர்த்தனைக்கு ஒரு கரன்சி அச்சடிக்கப்பட்டு, தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
நாட்டிற்கு நிறைய நன்கொடை கிடைத்திருப்பதால், நல்ல காரியத்திற்காக செலவிட வங்கி தொடங்கப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டப்படியே கைலாசாவின் ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டிருப்பதாகவும், சட்டத்திற்கு புறம்பாக எதுவும் இருக்காது எனவும் சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…