அவரை சந்தித்து கட்டிபிடிக்க முடியும்.. ஆனால் அவரது சித்தாந்தத்தை ஏற்க முடியாது.! ராகுல்காந்தி விமர்சனம்.!
பாஜக எம்பி வருண் காந்தியை சந்திக்க, கட்டிப்பிடிக்க முடியும் ஆனால், அவரது சித்தாந்தத்தை ஏற்று கொள்ள முடியாது. – காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி தற்போது பாரத ஓற்றுமை யாத்திரையை பஞ்சாபில் மேற்கொண்டு வருகிறார். இன்று நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி தனது உறவினர் வருண் காந்தி பற்றி பேசினார்.
வருண் காந்தி தற்போது பாஜக எம்பியாக இருக்கிறார். அவர் பற்றி ராகுல் காந்தி கூறுகையில், வருண் காந்தியை சந்திக்கலாம், அவரை கட்டிபிடிக்கலாம். ஆனால், அவரது சித்தாந்தந்தை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டார். மேலும், அவர் பாரத ஒற்றுமை யாத்திரையில் கலந்துகொண்டால் அது அவருக்கு தான் பிரச்சனையாக அமையலாம் எனவும் ராகுல் காந்தி தனது உறவினர் பாஜக எம்பி வருண் காந்தி பற்றி பேசினார்.