பாகிஸ்தான் கொடியை வீட்டில் ஏற்றிய வழக்கில் ஒருவர் கைது.!
மத்திய பிரதேசத்தில் ஃபாரூக் கான் என்பவரின் வீட்டில் பாகிஸ்தான் தேசியக் கொடி ஏற்றப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
மத்திய பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள ஷிப்ரா கிராமத்தில் வசிக்கும் ஃபாரூக் கான் வீட்டின் மேல் நமது அண்டை நாட்டின் கொடியை ஏற்றி இருப்பதாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வந்தது. அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த இப்பகுதியில் சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர் லகன் சிங்கை அந்த இடத்திற்குச் சென்று உண்மையில் பாகிஸ்தான் கொடி இருக்கிறதா..? என்றுஆய்வு செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
வருவாய் ஆய்வாளர் லகான் சிங் கூறுகையில், வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிய பின்னர், இது குறித்து விசாரிக்க சென்றபோது, தன்னுடைய 12 வயது மகன் தெரியாமல் பாகிஸ்தானின் தேசியக் கொடியை ஏற்றியதாகவும் , அதைப் பற்றி அறிந்ததும் அவர் கொடியை அவிழ்த்துவிட்டதாகவும் கூறினார்.
கான்ஸ் இல்லத்தில் இருந்து பாகிஸ்தான் கொடி பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், எங்கிருந்து கொடி கிடைத்தது என்பது குறித்து அவர் பதிலளிக்கவில்லை என லகான் சிங் கூறினார். இது குறித்து வருவாய் ஆய்வாளர் லகான் சிங் காவல்துறையிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஃபாரூக் கான் நேற்று மாலை ஐபிசி பிரிவு 153 ஏ கீழ் கைது செய்யப்பட்டார் என காவல்துறை தெரிவித்துள்ளனர்.