மனதை உலுக்கும் சம்பவம்..!மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காமல் ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு…!
ஆந்திராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை,மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காமல் ஆம்புலன்ஸிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஒரு தம்பதியரின் ஒன்றரை வயது குழந்தையான ஜான்விதாவுக்கு கடந்த ஒரு வாரமாக சளி மற்றும் காய்ச்சல் இருந்துள்ளது.இதன்காரணமாக,பரிசோதனை செய்ததில் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து,அருகில் உள்ள கே.ஜி.எச். அரசு மருத்துவமனையில் சேர்ப்பதற்காக குழந்தையை ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனர்.
ஆனால் மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை கிடைக்காமல்,மருத்துவமனைக்கு வெளியிலேயே ஆம்புலன்ஸில் குழந்தையை வைத்துக்கொண்டு இரண்டு மணி நேரமாக பெற்றோர் காத்திருந்தனர்.
இந்நிலையில்,படுக்கை வசதி கிடைக்கும் முன்பே அக்குழந்தை ஆம்புலன்ஸில் பரிதாபமாக உயிரிழந்தது.இதனால்,மருத்துவமனையின் வாசலிலேயே குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர்.இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.