நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் புதிய தலைமை செயலக மேற்பகுதியை இடிப்போம்.! பாஜக மாநில தலைவர் பரபரப்பு.!
தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைக்கப்பட்டதும், அனைத்து வகையான நிஸாம் கலாச்சார அடிமை கட்டமைப்புகளையும் அழித்துவிடுவோம். – பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய் பேச்சு.
தெலுங்கான பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய் அண்மையில் தனது கட்சி கூட்டத்தில் பேசிய பேச்சுக்கள் தற்போது பரபரப்பாக பேசப்படுகின்றன. அவர் தெலுங்கானாவில், புதியதாக கட்டப்பட்டுள்ள தலைமை செயலகத்தின் மேற்கூரையினை இடித்து தரைமட்டமாக்குவோம். எனவும், தெலுங்கானாவில் உள்ள நிசாம் பாரம்பரிய சின்னங்களை அழிப்போம் எனவும் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நிஸாம் கலாச்சார அடிமை கட்டமைப்பு : குக்கட்பல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் தெலுங்கான பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய் அரசியல் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசுகையில், தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைக்கப்பட்டதும், அனைத்து வகையான நிஸாம் கலாச்சார அடிமை கட்டமைப்புகளையும் அழித்துவிடுவோம் என்றார். நிஜாம் ஆட்சியின் கீழ் இருந்த அடிமைத்தன சின்னங்களை அளிப்போம் எனவும் கூறினார்.
தெலுங்கானா கலாச்சாரம் : மேலும், தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தின் குவிமாடங்களில் உள்ள நிஜாமின் கலாச்சார சின்னங்களை அழிப்போம். அதற்கு பதிலாக இந்திய மற்றும் தெலுங்கானா கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பொருத்தமான சின்னங்களை அதில் பாதிக்க ஏற்பாடு செய்வோம் என அவர் பேசினார்.
பண்டி சஞ்சய் மேலும் கூறுகையில், சாலை விரிவாக்கத்துக்கு இடையூறு விளைவிக்கும் வழிபாட்டுத் தலங்களை ஆளும் சந்திரசேகர ராவ் அரசு இடிக்கும் என்று கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக பேசுகையில், முடிந்தால், பழைய சாலைகளுக்கு நடுவே கட்டப்பட்டுள்ள மசூதிகளை இடித்து தள்ளுங்கள் என்று பேசினார். அடுத்தாக, மாநிலத்தின் வருவாயில் 60 சதவீதம் ஐதராபாத்தில் இருந்து தான் வருகிறது. அதில் எவ்வளவு தொகை நகரின் வளர்ச்சிக்கு செலவிடப்படுகிறது என்பதை மாநில அரசு விளக்க வேண்டும் என்று பண்டி சஞ்சய் கோரினார்.