மீண்டும் அஜித் தோவல், பிகே மிஸ்ரா.. முக்கிய பதவிக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு.!

Mishra and Doval

புதுடெல்லி : இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவலை 3வது முறையாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பிரதமரின் முதன்மைச் செயலாளராக பி.கே.மிஸ்ரா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், பிரதமர் அலுவலகத்தில் ஆலோசகர்களாக உள்ள அமித் கரே மற்றும் தருண் கபூர் ஆகியோர் அதே பதவியில் மேலும் 2 ஆண்டுகளுக்கு தொடர்வார்கள் என பணியாளர் நலன் அமைச்சகம் (DoPT) அறிவித்துள்ளது. கேபினட் அமைச்சருக்கான Protocol Rank உடன் NSAவாக அஜித் தோவல் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்து.

இவர்களது பதவிக்காலம் பிரதமரின் பதவிக்காலம் வரையிலோ அல்லது அடுத்த உத்தரவு வரும் வரையிலோ இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அஜித் தோவல் மற்றும் பி.கே.மிஸ்ராவை மீணடும் அந்தந்த பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட்டதன் மூலம், வலுவான தேசிய பாதுகாப்பு மற்றும் திறமையான நிர்வாக செயல்பாடுகளை நிலைநிறுத்துவதில் மோடியின் அணுகுமுறையை பிரதிபலிக்க செய்கிறது.

இந்த நியமனம் அறிவிப்பின் மூலம், மீண்டும் அந்த இரு ஓய்வுபெற்ற அதிகாரிகளும் முறையே அதிக காலம் NSA மற்றும் பிரதமரின் முதன்மை ஆலோசகர்களாக பணியாற்றிய அதிகாரிகளாக திகழ்கிறார்கள். பி.கே.மிஸ்ரா பிரதமரின் நிர்வாக விஷயங்களையும் நியமனங்களையும் தொடர்ந்து கையாளும் அதே வேளையில், அஜித் தோவல் தேசிய பாதுகாப்பு, இராணுவ விவகாரங்கள் மற்றும் உளவுத்துறை ஆகியவற்றைக் கையாளுவார்.

1972-ம் ஆண்டு குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான பி.கே. மிஸ்ரா, இந்திய அரசாங்கத்தின் விவசாயச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு, கடந்த பத்தாண்டுகளாக பிரதமர் மோடியுடன் இருந்துள்ளார். 1968 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அஜித் தோவல், 2014-ல் NSA ஆக பொறுப்பேற்றார். மிஸ்ரா மற்றும் தோவல் இருவரும் பிரதமர் மோடியின் மிகவும் நம்பகமான உதவியாளர்களாகக் கருதப்படுகிறார்கள். ஏனெனில் இருவரும் 2014-ல் பிரதமர் ஆவதற்கு முன்பு இருந்தே அவருடன் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Nagpur Violence -Sunita Williams LIVE
prithvi shaw
pm modi donald trump
sunita williams pm modi
premalatha vijayakanth edappadi palanisamy
BJP State President Annamalai say about Nellai Rtd Police murder
ADMK Former Minister Sellur Raju