ஒரு முஸ்லீம் பிரதமரானால்,50 சதவீதம் இந்துக்கள் மதம் மாறுவார்கள், 40 சதவீதம் பேர் கொல்லப்படுவார்கள் என்று யதி நரசிங்கானந்த் கருத்து.
டெல்லி புராரி மைதானத்தில் நேற்று இந்து மகா பஞ்சாயத்து நடைபெற்றது.அப்போது,கூட்டத்தில் பேசிய தஸ்னா தேவி கோவில் பூசாரி யதி நரசிங்கானந்த்,முஸ்லிம் ஒருவர் இந்தியாவின் பிரதமரானால் அடுத்த 20 ஆண்டுகளில் 50 சதவீத இந்துக்கள் மதம் மாறுவார்கள் என்று கூறினார்.குறிப்பாக,இந்துக்கள் தங்கள் பாதுகாப்புக்காக ஆயுதம் ஏந்தி போராடும்படி நரசிங்கானந்த் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
40 சதவீதம் பேர் கொல்லப்படுவார்கள்:
வரும் 2029 இல் அல்லது 2034 அல்லது 2039 ஆகிய காலகட்டங்களில் ஒரு முஸ்லீம் பிரதமராவார்.அவ்வாறு ஒரு முஸ்லீம் பிரதமரானால்,50 சதவீதம் இந்துக்கள் மதம் மாறுவார்கள், 40 சதவீதம் இந்துக்கள் கொல்லப்படுவார்கள்.மீதமுள்ள 10 சதவீதம் பேர் அகதிகளாக வேறு நாடுகளில் வாழ்வார்கள்.அடுத்த 20 ஆண்டுகளில் இவை நிகழும்.இதுவே இந்துக்களின் எதிர்காலமாக இருக்கும். இந்த எதிர்காலத்தை தவிர்க்க வேண்டுமானால் ஆயுதம் ஏந்த வேண்டும்.
வழக்குப் பதிவு – பிச்சைக்காரனாக இருப்பதை நிறுத்துங்கள்:
மேலும்,பேசிய நரசிங்கானந்த், “நீண்ட காலமாக இந்துக்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மன்றாடுவதை நான் பார்த்திருக்கிறேன்.ஆனால் எந்த ஒரு இந்துவின் கோரிக்கை கூட நிறைவேற்றப்பட்டதை நான் பார்த்ததில்லை.நாங்கள் பிச்சையினால் அல்ல,நீதிமன்றத்தின் தலையீட்டால் ராம ஜென்மபூமியைப் பெற்றோம், எனவே பிச்சைக்காரனாக இருப்பதை நிறுத்துங்கள்” என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து,யதி நரசிங்கானந்த் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் முஸ்லீம்களுக்கு எதிராக அநாகரீகமான கருத்துகளை வெளியிட்டதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்:
இதற்கிடையில், இந்த நிகழ்ச்சியை செய்தி சேகரிக்கச் சென்ற டெல்லியைச் சேர்ந்த சில பத்திரிகையாளர்கள் அங்கு தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுவதை போலீஸார் மறுத்துள்ளனர்.
எஃப்ஐஆர் பதிவு:
இதற்கு முன்னதாக,ஹரித்வாரில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 முதல் 19 வரை புனித நகரத்தில் நடைபெற்ற “தர்ம சன்சத்” நிகழ்ச்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக மிகவும் ஆத்திரமூட்டும் வகையில் பேசியதற்காக நரசிங்கானந்த் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…
காத்மாண்டு : நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால்…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள்…
சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர்…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…