ஓணம் பண்டிகை: மலையாளத்தில் வாழ்த்து கூறிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஓணம் பண்டிகையை தென்தமிழகம் மற்றும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். இந்நாளில் கேரளாவில் மட்டும் இந்த சிறப்பு நாளை கொண்டாட படுவதில்லை, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இந்நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் ஓணம் வாழ்த்து கூறியுள்ளார். இது குறித்து தனது X தள பக்கத்தில், நாம் பரஸ்பர அன்பும் நல்லிணக்கமும் கொண்ட தேசமாக மாறி அனைவரையும் சமமாகப் பார்ப்போம், பூக்கள், விருந்துகள் மற்றும் மகிழ்ச்சிகள் நிறைந்த ஓணம் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
പരസ്പര സ്നേഹവും പൊരുത്തവും ഉള്ള ഒരു ജനതയായി മാറാനും എല്ലാവരെയും തുല്യരായി കാണാനും നമുക്ക് സാധിക്കട്ടെ.
പൂക്കളവും സദ്യയും സന്തോഷവും നിറഞ്ഞ #ഓണാശംസകൾ!#HappyOnam #HappyOnam2023 #Onam pic.twitter.com/Rt6sJo95PU
— M.K.Stalin (@mkstalin) August 29, 2023
இதற்கிடையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவை, திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி என மொத்தம் 5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.