ஓணம் கொண்டாட்டம்! சுவையை சுண்டி இழுக்கும் ஓணம் சத்யா உணவு!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சத்யா உணவுகளை கேரளாவின் சில பகுதிகளில் சிலர் சுவையாக செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

onam kondattam 2024

ஓணம் : கேரளாவில் மக்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தான் ஓணம் பண்டிகை. இந்த பண்டிகை அதிகமாக கொண்டாடப்படுவது கேரளாவில் என்றாலும் கொண்டாடும் விதம் உலகம் முழுவதும் உள்ள மக்களை வெகுவாக கவர்ந்துவிடும் என்றே கூறலாம்.

அந்த அளவுக்கு பெரிய பெரிய வண்ணப்பூ கோலங்கள் போட்டுகொண்டு யானைகள் அலங்கரிக்கப்பட்டு நடனத்துடன் மகிழ்ச்சியாக அவர்கள் ஓணத்தை கொண்டாடுவதை பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். அது ஒரு பக்கம் இருக்க மற்றோரு பக்கம்,  இந்த பண்டிகைக்கு முக்கிய விஷயமாக பார்க்கப்படுவது பாரம்பரியமான உணவு முறை தான்.

அட ஆமாங்க…ஓணம் பண்டிகை என்றாலே சத்யா விருந்து தான். ஒரே வாழை இலையில் இவ்வளவு உணவுகளா? என நம்மளை வியப்பில் ஆழ்த்தும் வகையில், துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு என  அறுசுவை உணவுகள் இருக்கும். எனவே, ஓணம் பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்களுடைய வீடுகளில் இதனை, சுவையாகவும், வித்தியாசமாகவும் செய்து வருகிறார்கள்.

பெரிய வாழை இலையில் சிவப்பு நிற சாப்பாடு (சம்பா அரிசி), பரிப்பு, சாம்பார் , ரசம், இஞ்சிப்புளி , மெழுகுபுரட்டி, கிச்சடி, புளிசேரி, வாழை சிப்ஸ், ஊறுகாய், அவியல், கூட்டு கறி, பாலடா பாயசம், அடைப் பிரதமன், பாயசம், அப்பளம்  என அடிப்பொலியான உணவு வகைகள், சத்யாவில் இருக்கும்.

இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் சத்யாவை  இன்னும் சுவையாகவும், வித்தியாசமாகவும் சமையல் செய்து மக்கள் அசத்தியுள்ளார்கள். அவர்களை பற்றியும் அவர்கள் செய்த உணவுகளை பற்றியும் பார்க்கலாம்.

வளநாடு பகுதியில் வீட்டில் கிளவுட் கிச்சன் ஆக்ரந்தம் நடத்தி வரும் சினு சுவாமிநாதன் என்பவர் அசத்தலான அவியல் மற்றும் கூட்டு கறி ஆகியவற்றை சுவையாக செய்வதால் அந்த பகுதியில் பிரபலமாகி இருக்கிறார். தன்னுடைய பாட்டியின் கைப்பக்குவம் தனக்கு அப்படியே இருப்பதாகவும் அதனால் உணவுகள் தான் செய்தல் சுவையாக வருகிறது உணவு கூறுகிறார்.

அவர் செய்யும், கூட்டு கறியில் (காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளால் செய்யப்பட்ட கெட்டியாக) இருக்கும் ஆரோக்கியமாக இருக்கும் எனவும் கூறுகிறார். மொத்தமாக 24 உணவு வகைகளை கொண்ட இவர் தயாரிக்கும் சத்யாவை ரூ.1,800க்கு விற்பனை செய்து வருகிறார்.

அவரைப்போல, கண்ணுரில் வசித்து வரும் மெசன் விஜயன் மற்றும் மேகன் ஜோதிபிரகாஷ் இருவரும் இணைந்து இஞ்சிப்புள்ளி, நேந்திரக்காய் (வாழைப்பழ சிப்ஸ்), மாங்காய் மற்றும் பேரிச்சம்பழம் ஆகியவற்றில் ஊறுகாய் செய்து விற்பனை செய்துவருகிறார்கள். இவர்கள் மொத்தம் 11 சத்யா உணவுகளை வழங்கிவரும் நிலையில், மொத்தம் ரூ.950க்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

இவர்களை போல, பாலக்காட்டில் மாலதி முரளி என்பவர் வீட்டில் மெஸ் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 25 வகைகளில் உணவுகளை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். இவர்களுடைய உணவுகளில் ஸ்பெஷல் என்னவென்றால் அவியல் தானாம். ஏனென்றால், வெங்காயம், பூண்டு இல்லாமல் தயார் செய்கிறார்களாம். இவர்கள் விற்கும் உணவு விலை 375 ரூபாய். இந்த ஆண்டு ஓணம் பண்டிகைக்கு இவர்கள் 3 பேருடைய உணவு தான் கேரளாவில் பெரிய அளவில் விற்பனையாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்