ஓணம் கொண்டாட்டம்! செம குத்தாட்டம் போட்ட கொல்லம் கலெக்டர்..வைரலாகும் வீடியோ!

Kerala

இந்தியாவின், தென்தமிழகத்திலும் மற்றும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய திருவிழா ஓணம். இந்த ஓணம் பண்டிகை கடந்த 20-ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், வரும் 29-ஆம் தேதி ஓணம் விருந்து படைத்து மக்கள்  இந்த பண்டிகையை கொண்டாடி முடிப்பார்கள்.ஆண்டு தோறும் இந்த ஓணம் பண்டிகை  10 நாட்கள் அரசு விழாவாக கொண்டாடிவருகிறது.

இந்நிலையில், கேரளாவின் கொல்லம் மாநிலத்தில் நடந்த கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஓணம் பண்டிகையில் மாவட்ட கலெக்டர் அப்சனா பர்வீன் உற்சாகத்துடன் நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒனபாட்டுடன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கலெக்டரை கைதட்டி உற்சாகப்படுத்திய கலெக்டர், சினிமா ஸ்டெப் போட்டு டிராக்கை மாற்றுவதையும் வீடியோவில் காணலாம்.

வீடியோவில் “முதலில் ஓணபாட்டுக்கு அழகாக நடனமாடிய கலெக்டர், பின் தடம் கையில் கூலிங் கிளாஸ் எடுத்துக்கொண்டு சினிமா பாடலுக்கு சூப்பரான நடனம் ஆடினார். இவர் நடனம் ஆடியதை பார்த்த அங்கிருந்த அனைவரயும் தங்களுடைய கைகளை தட்டி அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், அப்சானா பர்வீன் கடந்த 2021-ஆம் ஆண்டு கொல்லம் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றார். 2014 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான அப்சானா, பீகாரில் உள்ள முசாஃபிர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பொறியியல் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்