எம்.ஜே.அக்பர் பத்திரிக்கையாளர் பிரியா ரமணி மீது டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
ஏசியன் ஏஜ் உள்பட பல்வேறு பத்திரிகைகளில் முதன்மை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பொறுப்புகளில் பணியாற்றியவர் எம்.ஜே.அக்பர். இவர் பத்திரிகை பணியை கைவிட்டு பாஜகவில் இணைந்து செயல்பட்டார். தமது அமைச்சரவையில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவரின் முகம் வேண்டும் என்பதால் எம்.ஜே.அக்பரை, பிரதமர் மோடி வெளியுறவுத்துறை இணை அமைச்சராக்கினார்.
இந்நிலையில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பாக சமீபகாலமாக பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமூக ஊடகங் களில், பல்வேறு தருணங்களில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள், ‘நானும்தான்’ (மீ டூ) என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி உண்மைகளை வெளியிட்டு வருகின்றனர்.
இதில் குறிப்பிடத்தக்க பதிவாக கஜாலாவஹாப் என்ற பெண், மோடி அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது புகார் கூறி, பதிவு செய்த பாலியல் வன்முறை சம்பவம் குறித்த விபரம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.கஜாலா வஹாப்பை தொடர்ந்து பல்வேறு தருணங்களில் அக்பருக்கு கீழ் பணியாற்றிய 16 பெண் பெண் பத்திரிகையாளர்கள், அக்பர் தங்களிடமும் பாலியல் வன்முறையில் ஈடுபட்டார் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினர்.
இதில் குறிப்பாக பத்திரிக்கையாளர் பிரியா ரமணி என்பவர் ஆசிரியராக இருந்தபோது அக்பர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் கூறினார்.
பின்னர் இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில்,மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து கட்சி ரீதியாக விசாரிக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஆனால் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் கூறுகையில் அனைத்திற்கும் விடை விரைவில் கூறுகிறேன் என்று கூறினார்.அவர் கூறிய முதலே அனைத்து பத்திரிக்கையாளர்களும் அவரது இல்லம் முன்பு குவிந்து இருந்தார்கள்.இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதில் கூறியுள்ளார்.அவர் கூறுகையில், என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை,அடிப்படை ஆதாரமில்லாதவை.அதேபோல் என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (அக்டோபர் 15 ஆம் தேதி ) மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பத்திரிக்கையாளர் பிரியா ரமணி மீது டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் பத்திரிக்கையாளர் பிரியா ரமணி மீது அவதூறு மனு தாக்கல் செய்தார் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர்.
i பாலியல் புகார் கூறிய நிலையில் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்.அதன்பின்னர் அவர் கூறுகையில்,என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. நான் நேர்மையானவன் என்பதை நீதிமன்றத்தின் மூலம் நிரூபிப்பேன் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் எம்.ஜே.அக்பர் பத்திரிக்கையாளர் பிரியா ரமணி மீது டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…
சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…
சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…