சடலம் கிடப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவல்துறையினர்!அவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
- குழந்தையின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.
- குழந்தையின் மரணம் கொலையா?அல்லது புதைக்காமல் வீசி சென்றார்களா?என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
தமிழ் நாடு மற்றும் கர்நாடக மாநில எல்லை பதியான ஓசூர் மாநகராட்சி அருகே மத்தம் அக்ரகார பகுதியில் உள்ள முட்புதரில் பிஞ்சு குழந்தையின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் அந்த பகுதிக்கு காவல்துறையினர் விரைந்து சென்றுள்ளனர்.பின்னர் பிறந்து இரண்டு நாட்களே ஆன அந்த குழந்தையின் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முட்புதருக்குள் கிடந்த அந்த குழந்தையின் சடலத்தை நாய்கள் கடித்து குதறியதில் பாதி உடல் மட்டுமே கிடைத்துள்ளது.அந்த உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் சடலம் பாதி மட்டுமே கிடைத்ததால் குழந்தை ஆணா?பெண்ணா ?என்பதை கண்டறிய முடியவில்லை.இருப்பினும் குழந்தை கொலை செய்யப்பட்டதா ?அல்லது புதைக்காமல் வீசி சென்றார்களா?என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.