7ம் தேதி நிபுணர் குழுவுடன் மேகதாதுவில் அணை கட்டும் பகுதி, நீர்த்தேக்க பகுதிகளை ஆய்வு செய்கிறோம்…! கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார்
அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு ரூ.5கோடி செலவில் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும் என்று கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், மேகதாது அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசு சாத்தியக்கூறு அறிக்கை கேட்டுள்ளது. 7ம் தேதி நிபுணர் குழுவுடன் மேகதாதுவில் அணை கட்டும் பகுதி, நீர்த்தேக்க பகுதிகளை ஆய்வு செய்கிறோம்.அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு ரூ.5கோடி செலவில் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.