கோழிக்கறி சாப்பிட்டால் கொரொனா பரவுமா ?பொது மக்கள் முன்னிலையில் அமைச்சர்கள் செய்த செயல்

கோழி இறைச்சி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவாது என்று தெலங்கானா அமைச்சர்கள் அச்சத்தை போக்கியுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் உள்ள உகானில் கொவிட் 19 வைரஸ்(கொரோனா) கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் உகானில் நகரில் இருந்து சீனாவில் உள்ள மற்ற நகரங்களுக்கு வேகமாக பரவ தொடங்கியது. இதனால் தினமும் இந்த வைரசால் சீனாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி தென்கொரியா , ஜப்பான் , இந்தியா , அமெரிக்கா போன்ற பல நாடுகளில் பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கோழி சாப்பிடுவதால் கொரோனா (தற்போது கொவிட் 19 வைரஸ் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது)வைரஸ் தாக்கம் என்ற செய்தி அதிகம் வெளியாகி வந்தது.இது பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது.எனவே அச்சத்தை போக்கும் விதமாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ,மக்கள் முன்னிலையில் அமைச்சர்கள் கோழிக்கறியை சாப்பிட்டனர்.மேலும் கொரோனா பரவும் என்பது வெறும் வதந்தியே, அதில் துளியும் உண்மை இல்லை என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025
விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!
February 27, 2025
நாளை சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் கணிப்பு!
February 27, 2025