உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் அறிவித்தது போல குடியரசு தினத்தன்று 1091 வழக்குகளின் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கள் அந்தந்த மாநில பிராந்திய மொழிகளில் வெளியாக உள்ளது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அண்மையில் கோவா வழக்கறிஞர்கள் சங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சில் முக்கிய அழைப்பாளரா உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் அழைக்கப்பட்டு இருந்தார். அந்த விழாவில் முக்கியமான அறிவிப்பை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார் .
உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் : அதாவது, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருக்கின்றன. அதனை பெரும்பாலான மக்களால் எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை. அதனை தீர்க்க, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ், இந்தி உட்பட பிராந்திய மொழியில் மொழிபெயர்க்கப்படும் என தெரிவித்தார். உச்சநீதிமன்றம் தொடர்பான தகவல்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் தொழில்நுட்பம் உதவும். அதன் முதற்கட்டமாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிட நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார்.
குழுவின் தலைவர் ஏ.எஸ்.ஓகா : அதன்படி, தற்போது, உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்க்க 6 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. இந்த மொழிபெயர்ப்பு குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஓகா நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ், என்.ஐ.டி. தர்மிஸ்தா, டெல்லி ஐ.ஐ.டி. மித்தேஷ் கப்தா, ஏக்.ஸ்டெப் பவுண்டேசன் விவேக் ராகவன், சுப்ரியா சங்கரன் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
1091 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் : இந்த குழுவானது முதற்கட்டமாக உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழ், இந்தி, குஜராத்தி, ஒடியா ஆகிய முக்கிய மாநில மாநில மொழிகளில் மொழிபெயர்க்க உள்ளது. நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு 1091 வழக்குகளின் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…