குடியரசு தினத்தன்று 1000 வழக்குகளின் தீர்ப்புக்கள் அந்தந்த மாநில மொழிகளில்… உச்சநீதிமன்றம் அறிவிப்பு.!

Default Image

உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் அறிவித்தது போல குடியரசு தினத்தன்று 1091 வழக்குகளின் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கள் அந்தந்த மாநில பிராந்திய மொழிகளில் வெளியாக உள்ளது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அண்மையில் கோவா வழக்கறிஞர்கள் சங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சில் முக்கிய அழைப்பாளரா உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் அழைக்கப்பட்டு இருந்தார். அந்த விழாவில் முக்கியமான அறிவிப்பை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார் .

supreme court justice chandrachud

உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் : அதாவது, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருக்கின்றன. அதனை பெரும்பாலான மக்களால் எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை. அதனை தீர்க்க, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ், இந்தி உட்பட பிராந்திய மொழியில் மொழிபெயர்க்கப்படும் என தெரிவித்தார்.  உச்சநீதிமன்றம் தொடர்பான தகவல்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் தொழில்நுட்பம் உதவும். அதன் முதற்கட்டமாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிட நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார்.

OKHA

குழுவின் தலைவர் ஏ.எஸ்.ஓகா : அதன்படி, தற்போது, உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்க்க 6 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. இந்த மொழிபெயர்ப்பு குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஓகா நியமிக்கப்பட்டுள்ளார்.  கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ், என்.ஐ.டி. தர்மிஸ்தா, டெல்லி ஐ.ஐ.டி. மித்தேஷ் கப்தா, ஏக்.ஸ்டெப் பவுண்டேசன் விவேக் ராகவன், சுப்ரியா சங்கரன் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

JUDGEMENT

1091 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் : இந்த குழுவானது முதற்கட்டமாக உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழ், இந்தி, குஜராத்தி, ஒடியா ஆகிய முக்கிய மாநில மாநில மொழிகளில் மொழிபெயர்க்க உள்ளது. நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு 1091 வழக்குகளின் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்