72 வது குடியரசு தின விழாவையொட்டி தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்!
டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றினார்.
இன்று நாடு முழுவதும் 72 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு கொரோனா காரணமாக ராஜபாதை குடியரசு தின நிகழ்ச்சிகளை பார்வையிட 25,000 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ராஜபாதைக்கு வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி வரவேற்றார்.ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி,மத்திய அமைச்சர்கள் முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.பின்னர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றினார்.பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டு வருகிறார்.