மார்ச் 18ம் தேதி யெஸ் வங்கி வழக்கம்போல் செயல்படும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

Published by
பாலா கலியமூர்த்தி

யெஸ் வங்கி படிப்படியாக சிக்கலில் இருந்து மீட்கப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் பேட்டி அளித்துள்ளார். அப்போது யெஸ் வங்கியில் முதலீட்டாளர்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது என தெரிவித்தார். இந்திய வங்கித்துறை வலுவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறது எனவும் குறிப்பிட்டார். மேலும் வரும் மார்ச் 18ம் தேதி யெஸ் வங்கி வழக்கம்போல் செயல்படும் என தெரிவித்தார். இதனிடையே வராக்கடன் பிரச்னையால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பட்டு கீழ் கொண்டுவந்தது.

பின்னர் வாடிக்கையாளர்கள் ரூ.50,000க்கு மேல் பணம் எடுக்க கட்டுப்பாடு விதித்தது. மேலும் இந்த வங்கியை நெருக்கடியில் இருந்து மீட்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கி இறங்கியது. இதையடுத்து யெஸ் வங்கியின் பங்குகளை விற்பனை செய்து, நிதி திரட்டும் முயற்சியில் ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, யெஸ் வங்கியில் ரூ.7,250 கோடியை முதலீடு செய்ய ஒப்புதல் பெற்றுள்ளது. 

பின்னர் யெஸ் வங்கியில் தனியார் துறை வங்கிகள் சில முதலீடு செய்ய முன்வந்துள்ளன. அதன்படி ஐசிஐசிஐ வங்கி ரூ.1,000 கோடியை யெஸ் வங்கியில் முதலீடு செய்யப்போகிறது. இதைத்தொடர்ந்து ஹெச்.டி.எஃப்.சி ரூ.1,000 கோடி, ஆக்சிஸ் பேங்க் ரூ.600 கோடி, கோடாக் பேங்க் ரூ.500 கோடியையும் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் யெஸ் வங்கி படிப்படியாக சிக்கலில் இருந்து மீட்கப்படும் என்றும் வரும் மார்ச் 18ம் தேதி யெஸ் வங்கி வழக்கம்போல் செயல்படும் என யெஸ் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

13 நிமிடங்களில் 13 கி.மீ…. மெட்ரோ ரயிலில் பயணித்த இதயம்..!

13 நிமிடங்களில் 13 கி.மீ…. மெட்ரோ ரயிலில் பயணித்த இதயம்..!

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…

16 minutes ago

தங்கம் விலை சற்று சரிவு… இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…

23 minutes ago

‘ராஞ்சி போட்டிகளில் விளையாட மாட்டோம்?’ கோலிக்கு கழுத்து வலி! கே.எல்.ராகுலுக்கு முழங்கை பிரச்சனை!

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…

29 minutes ago

டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை? உறுதியானது நீதிமன்ற தீர்ப்பு!

நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…

1 hour ago

தூத்துக்குடியை அடுத்து மதுரை, திருச்சியில் புதிய டைடல் பார்க்! அடுத்தகட்ட பணிகள் தீவிரம்…

சென்னை : தென் தமிழகத்தில் முதல் 'மினி டைடல் பார்க்'-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து…

2 hours ago

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி ரெடி… இன்று மதியம் அறிவிக்கும் பிசிசிஐ!

டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பைக்கான இந்திய அணியை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு…

3 hours ago