செகந்திராபாத் – விசாகப்பட்டினத்தை இணைக்கும் வந்தே பாரத்! ஜனவரி-15இல் தொடங்கி வைக்கிறார் மோடி.!
செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை, மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இந்தியாவின் 8-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை, பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 15ஆம் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். ஏஎன்ஐ(ANI) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 15 ஆம் தேதி செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இது நாட்டின் 8-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் தெலுங்கானா-ஆந்திராவை இணைக்கும் முதல் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். சுமார் 700 கிமீ தொலைவை இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், 8.30 மணிநேரத்தில் கடக்கும் என்று கூறப்படுகிறது.