தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை காணொலி வாயிலாக பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.
தமிழகத்தில் ராமநாதபுரம்,விருதுநகர்,திண்டுக்கல்,நீலகிரி,திருப்பூர், நாமக்கல்,திருவள்ளூர்,நாகப்பட்டினம்,கிருஷ்ணகிரி,அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி அளித்தது.அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க ஜனவரி 12 ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வர இருந்த நிலையில், கொரோனா காரணமாக பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்,11 புதிய கல்லூரிகளை காணொலி காட்சி மூலமாக நாளை(ஜனவரி 12 ஆம் தேதி) பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.மேலும்,இந்த புதிய மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ் இடங்களை 1450 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து,சென்னை செம்மொழி மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி நாளை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுமார் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டு வருகின்றன.அதில் சுமார் ரூ.2,145 கோடியை மத்திய அரசும்,மீதியை தமிழக அரசும் வழங்கியுள்ளன.இந்த நிலையில்,தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளையும், சென்னை செம்மொழி மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி நாளை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கவுள்ளார்.
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : பொங்கல் போட்டியில் இருந்து விடாமுயற்சி படம் வெளியேறியதில் இருந்து அடுத்ததாக பொங்கல் ரிலீஸ்க்கு நிறைய படங்கள் போட்டிக்கு வந்து…
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா்…
சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில்…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…