வருகின்ற 19-ம் தேதி பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நாட்டில் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது.வரி விதிப்பு முறையில் சில சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
ஏற்றுமதியை ஊக்குவிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள சிறு சறுக்கலை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் மிக பிரகாசமாக தெரிகின்றன. நாட்டில் வரி செலுத்தும் முறை மிகவும் எளிமையாக்கப்படும்.உற்பத்திக்கு புத்துயிர் அளிப்பது தொடர்பாக வரும் 19-ம் தேதி பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். வங்கி சீர்திருத்தத்தை தொடர்ந்து வரிசீர்திருத்தம் கொண்டுவர பரிசீலிக்கப் படுகிறது என்று பேசினார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…