ஒமைக்ரான் வைரஸ்:மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? – உச்சநீதிமன்றம் கேள்வி!
உலகையே அச்சுறுத்தும் புதிய வைரஸ் வகை கொரோனா வைரஸினை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ்,தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், இத்தகைய புதிய வகை கொரோனா வைரஸானது புதிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.
இதற்கு மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு விசாரணையின்போது, ஒமைக்ரான் வைரஸ் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில்,புதிய வகை வைரஸினை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்று மத்தய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.