ஓமைக்ரான் வைரஸ் : கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு எச்சரிக்கை!

Default Image

ஓமைக்ரான் வைரஸ் கொரோனாவிலிருந்து மீண்டவர்களை தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவில் தற்பொழுது கொரோனா வைரஸ் உருமாறி அதிக வீரியமுள்ள வைரஸாக பரவி வருகிறது. இந்த வைரஸுக்கு ஓமைக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. இவை டெல்டா வைரஸ் போலவே அதிகளவில் பரவி ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. இதனால் தென் ஆப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வைரஸ் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் உடலில் பாதிப்பை ஏற்படுத்தாது என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு இந்த ஓமைக்ரான் வைரஸ் விரைவில் பாதிப்பை ஏற்படுத்தும் என உலக சுகாதார நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. எனவே கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் முறையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்