நாட்டின் முதல் முப்படைகளின் தலைமை தளபதியை இழந்தது வேதனை அளிக்கிறது என்று ‘மன்கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை.
பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். ‘மன்கி பாத்’ (மனதின் குரல்) என அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசி வருகிறார். இந்த நிலையில், இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஓமைக்ரானை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
உலகத்தையே அச்சுறுத்தும் ஓமைக்ரான் வகை கொரோனா வைரஸ் நமது வீட்டு கதவை தட்டிவிட்டது. சர்வதேச பெருந்தொற்றை வீழ்த்த நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சிப்பது மிகவும் முக்கியம். இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 140 கோடி அளவிற்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலகளவில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய பிரதமர், நாட்டின் முதல் முப்படைகளின் தலைமை தளபதியை ஹெலிகாப்டர் விபத்தில் நாம் இழந்தது வேதனையளிக்கிறது. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த குரூப் கேப்டன் வருண சிங்கிற்கு பிரதமர் புகழாரம் சூட்டினார். பல சாகசம் நிறைந்த யுத்தத்தை நிகழ்த்தி மரணத்தை வெல்ல பல நாட்கள் போராடி குரூப் கேப்டன் வருண் சிங்கும் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்.
வருண் சிங்கிற்கு இந்தாண்டில் சவுர்யா சக்ரா விருது வழங்கப்பட்டது. சவுர்யா சக்ரா விருது பெற்ற வருணசிங் தனது பள்ளி ஆசிரியருக்கு எழுதிய கடிதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இறந்த வருண் சிங்கிற்கு வருங்கால தலைமுறையினர் மீது பெரும் அக்கறை இருந்தது என்றும் குறிப்பிட்டார். இந்திய கலாச்சாரத்தை பற்றி தெரிந்துகொள்ளவும், அதை பரப்பவும் பல்வேறு நாட்டினர் ஆர்வம் காட்டுகின்றன.
மேலும், புத்தகங்கள் நமக்கு அறிவை கொடுப்பதோடு, அது நமது வாழ்க்கையை செதுக்குகிறது. பள்ளியில் நீங்கள் சராசரி மாணவராக இருக்கலாம், ஆனால் வாழ்க்கையில் அது ஒரு அளவுகோல் அல்ல. எதில் பணியாற்றுக்கீர்களோ அதில் அர்ப்பணிப்புடன் இருங்கள், நம்பிக்கையை இழக்காதீர்கள் என்றும் பிரதமர் மோடி ‘மன்கி பாத்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் கூறியுள்ளார்.
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…