மகாராஷ்டிராவில் ஓமிக்ரானனின் BA.5 மற்றும் BA.4 வகை கொரோனா பாதிப்பு !
மகாராஷ்டிரா மாநிலத்தில் கோவிட்-19 இன் ஓமிக்ரான் ஸ்ட்ரெய்னின் BA.5 மற்றும் BA.4 துணை வகைகளில் புதியதாக ஒன்பது பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
BA.5ல் உள்ள ஆறு நோயாளிகளும், BA.4ல் உள்ள மூன்று பேரும் புனேவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. Omicron’s BA.2.75 துணை மாறுபாட்டின் மேலும் 10 பேருக்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இது மகாராஷ்டிரா மாநிலத்தில் BA.4 மற்றும் BA.5 நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.