டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி!

டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி என தகவல்.
உலக முழுவதும் கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்த நிலையில், புதிதாக தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளுக்கு பரவி உள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
இதனால் டெல்லியில் இதுவரை 6 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியான நிலையில், ஒருவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். மேலும், இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
அதன்படி, மகாராஷ்டிரா – 20, குஜராத் – 4, ராஜஸ்தான் – 9, டெல்லி – 6, ஆந்திரா -1, கர்நாடகா – 3, சண்டிகர் – 1, கேரளா – 1 என மொத்தம் 45 பேர் இதுவரை இந்த பவைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025