ராஜஸ்தானில் மேலும் 21 பேருக்கு ஓமைக்ரான் – மாநில சுகாதாரத்துறை
ராஜஸ்தானில் மேலும் 21 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு.
இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415ஆக அதிகரித்துள்ள நிலையில், 115 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் 21 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. புதிதாக 21 பேருக்கு ஓமைக்ரான் உறுதியான நிலையில், ராஜஸ்தானில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.
Rajasthan | 21 new cases of #Omicron reported today, taking the total tally to 43: State Health Dept
— ANI (@ANI) December 25, 2021